வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1800-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.1800-க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.500-க்கும் விற்பனையானது.


Next Story