வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.6 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.2 ஆயிரத்துக்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.800- க்கும் விற்பனையானது. தொடர் மழையின் காரணமாகவும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.


Next Story