வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முனிநாதபுரம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை பயிர் செய்துள்ளனர். விளைந்தவுடன் பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலைமண்டிக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.1800-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.800- க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story