மழலையர் வகுப்பு தொடக்கம்
கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி சார்பில், 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டது.
தேனி
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி சார்பில், 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்பு தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா சமுதாயக்கூடத்தில் நடந்தது. இதற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகராட்சி கவுன்சிலரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான கடவுள் தலைமை தாங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுக்கு நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள், இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டி லட்சுமி, ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா மற்றும் பொது பள்ளி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story