பி.எட். வினாத்தாள் லீக்கான விவகாரம்: உயர்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு


பி.எட். வினாத்தாள் லீக்கான விவகாரம்: உயர்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு
x

இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கானது.

சென்னை,

பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 4வது செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி முதல் இந்த தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறவிருந்த "creating an inclusive school" என்ற பாடத்துக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்ற நிலையில், முன்கூட்டியே வெளியான வினாத்தாளை உயர்கல்வித்துறை ரத்துசெய்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் மூலம் வேறு வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே கசிய விட்டவர்கள் யார்? யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story