பவானிசாகர் வனப்பகுதியில் குட்டியை தூக்கிச்சென்றதால்சிறுத்தைப்புலியை துரத்திய காட்டுப்பன்றிகள்- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி


பவானிசாகர் வனப்பகுதியில் குட்டியை தூக்கிச்சென்றதால்சிறுத்தைப்புலியை துரத்திய காட்டுப்பன்றிகள்- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
x

பவானிசாகர் வனப்பகுதியில் குட்டியை தூக்கிச்சென்றதால் சிறுத்தைப்புலியை துரத்திய காட்டுப்பன்றிகள்- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

ஈரோடு

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா செல்லும் சாலையில் சிறுத்தைப்புலிகள், புலிகள், யானைகள், காட்டுப்பன்றிகள் அதிகமாக உள்ளன. பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் மண்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்த நிலையில் தெங்குமரஹாடா செல்லும் வனச்சாலையில் ஜீப் ஒன்றில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காட்டுப்பன்றிகள் சாலையை கடந்து வேகமாக ஓடின. இதனால் அவர்கள் ஜீப்பை நிறுத்தினர். காட்டுப்பன்றிகளை துரத்தி வந்த சிறுத்தைப்புலி அதிலுள்ள ஒரு குட்டியை கவ்வி தூக்கிக்கொண்டு ஓடியது. இதில் ஆத்திரம் அடைந்த மற்ற காட்டுப்பன்றிகள் சிறுத்தைப்புலியை துரத்தின. அவற்றிடம் இருந்து தப்பிக்க சிறுத்தைப்புலி அங்குள்ள ஒரு மரத்தின் மீது ஏறி தாவிகுதித்து தப்பியோடியது. இருப்பினும் காட்டுப்பன்றிகள் சிறுத்தையை துரத்திக்கொண்டு ஓடியது. இந்த காட்சியை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜீப்பில் இருந்தவாறு இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story