வரத்து குறைந்ததால்பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.6 அதிகரிப்புதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.66-க்கு விற்பனை
தர்மபுரி
தமிழ்நாட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் பீன்ஸ் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சந்தைக்கு பீன்ஸ் வரத்து அதிகரித்ததால் அதன் விலை கணிசமாக குறைந்தது. ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையான பீன்ஸ் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.6 விலை அதிகரித்தது. வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.66- க்கு விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.75 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story