தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்


தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்
x

சேலம் உருக்காலையில் தொ.மு.ச. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் உருக்காலை 5ஏ கேட் முன்பு சேலம் உருக்காலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எஸ்.சி., எஸ்.டி. அசோசியேசன் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொ.மு.ச. துணைத்தலைவர் துரைராஜ் தொடங்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் பெரியசாமி விளக்கி பேசினார். துணைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. நல சங்க தலைவர் கதிர்வேல், தொ.மு.ச. பொருளாளர் செந்தில்குமார், துணை பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி பாரதிராஜா, அமைப்பு செயலாளர் முத்துகிருஷ்ணன், எஸ்.சி., எஸ்.டி. அமைப்பு செயலாளர் பாலசந்தர் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் ஆர்.ஜீவானந்தம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்த வருடத்துக்கான நியாயமான போனஸ் வழங்க வேண்டும். முடிக்கப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில் 39 மாத நிலுவைத்தொகை மற்றும் அனைத்து அலவன்சும் வழங்க வேண்டும். துர்காபூர் உருக்கு ஆலையில் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story