2 பேர் சாவு எதிரொலி:பருவமழை காலத்தில் நீா்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


2 பேர் சாவு எதிரொலி:பருவமழை காலத்தில் நீா்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:41 AM IST (Updated: 31 Oct 2022 11:10 AM IST)
t-max-icont-min-icon

ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந்ததை தொடர்ந்து, நீர்நிலைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந்ததை தொடர்ந்து, நீர்நிலைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பருவமழையையொட்டி அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தவிர்க்க வேண்டும்

மாத்தூர் தொட்டிபாலம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீச்சல் மற்றும் குளிக்கும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை செய்திகள் அல்லது பலகைகள் வைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மழை காலம் என்பதால் அணைகளின் நீர்மட்டத்திற்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. எனவே அனைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறுகள், குளங்கள், தாழ்வான பகுதிகளில் குளிப்பது மற்றும் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story