நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர்; தொடர் விபத்து காரணமாக நடவடிக்கை


நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர்; தொடர் விபத்து காரணமாக நடவடிக்கை
x

தொடர் விபத்து காரணமாக நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நாள்தோறும் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. குறிப்பாக திருப்போரூர்-நெம்மேலி இணைப்பு கிழக்கு கடற்கரை சாலையில் வலது, இடது என இரு பக்கமும் சாலை தடுப்பு பலகைகள் அமைத்தும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நெம்மேலியில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையின் இணைப்பு பகுதி பள்ளமாக உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி கடக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் கிழக்கு கடற்கரை சாலையை தொடும்போது, சென்னை, புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் இந்த வாகனங்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டு இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நெடுஞ்சாலை துறையினர் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் நேற்று திருப்போரூர்-நெம்மேலி வளைவு பகுதியில் சிமெண்ட் காங்கிரிட்டால் அடைத்தனர்.

இனிமேல் திருப்போரூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள புதுகல்பாக்கம் மற்றும் சூளேரிக்காடு வரை சென்றுதான் அங்குள்ள வளைவு பகுதியில் திரும்பி புதுச்சேரி மற்றும் சென்னை செல்ல முடியும். பொதுமக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story