தரிசு நிலங்களை வேளாண்மை இயக்குனர் ஆய்வு


தரிசு நிலங்களை வேளாண்மை இயக்குனர் ஆய்வு
x

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தரிசு நிலங்களை வேளாண்மை இயக்குனர் ஆய்வு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சீரமைத்து சாகுபடி செய்ய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது தரிசு நில சாகுபடியின் பயன்கள், அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து சாகுபடி செய்ய அறிவுரை வழங்கினார். அப்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், துணை வேளாண்மை இயக்குனர்கள் பெரியசாமி, கண்ணகி, செல்வபாண்டியன், நேர்முக உதவியாளர் சண்முகம், உதவி இயக்குனர் மாதவன், தோட்டக்கலை அலுவலர் அனுசுயா, வேளாண்மை அலுவலர் திவ்ய பாரதி, பூங்காவனம், தாலுகா சர்வேயர் ரஜினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story