மீன்பிடி தடைக்காலம் தொடங்கும் முன்பே கரைக்குவந்த விசைப்படகுகள்


தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 2 நாட்களுக்கு முன்கூட்டியே விசைப்படகுகள் கரைக்கு வந்தன.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 2 நாட்களுக்கு முன்கூட்டியே விசைப்படகுகள் கரைக்கு வந்தன.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் ஏப்ரல் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாகும். இந்த 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவிறுத்தியுள்ளது.

இதை அடுத்து ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் முன்கூட்டியே கரைக்கு வந்து விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பே...

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்கள் அதிக அளவு கிடைக்காததால், தடைக்காலம் தொடங்கும் முன்பே விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளோம் என்றனர்.



Next Story