தக்கலையில்வங்கி அதிகாரி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து


தக்கலையில்வங்கி அதிகாரி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
x

தக்கலையில் வங்கி அதிகாரி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலையில் வங்கி அதிகாரி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டில் புகை மூட்டம்

தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (வயது70), ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவருக்கு ராஷிமா என்ற மனைவியும் சபீக் என்ற மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை ஷாகுல் ஹமீது தொழுகைக்காக வீட்டில் இருந்து மசூதிக்கு சென்றார். வீட்டின் மேல்தளத்தில் மனைவியும், மகனும் தூங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலை 5.45 மணிக்கு வீட்டில் இருந்து பயங்கர புகைமூட்டம் வெளியே வந்தது. இதைபார்த்து அருகில் வசிப்பவர்கள் சத்தமிட்டனர். உடனே, தூங்கி கொண்டிருந்த ராஷிமாவும் மகனும் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த வீடு திரும்பிய ஷாகுல் ஷமீது சமையல் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிப்பதை கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அத்துடன் அருகில் உள்ளவர்களின் உதவியோடு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சமையல் அறையில் சென்று அங்கிருந்த கியாஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வந்தனர். அறை முழுவதும் வெப்பமாக இருந்ததால் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர செய்தனர். பின்னர் அறையை ஆய்வு செய்தபோது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து எரிந்ததால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரிய வந்தது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ெபரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story