ரூ.7¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


ரூ.7¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x
தினத்தந்தி 25 Jun 2023 3:34 AM IST (Updated: 25 Jun 2023 3:37 AM IST)
t-max-icont-min-icon

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

ஈரோடு

கடத்தூர்

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

வாழைத்தார்கள் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 3 ஆயிரத்து 740 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.40-க்கும், நேந்திரன் ரூ.38-க்கும் ஏலம் போனது.

பூவன் (தார்) ரூ.440-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், செவ்வாழை ரூ.800-க்கும், பச்சைநாடன் ரூ.410-க்கும், ரொபஸ்டா ரூ.420-க்கும், மொந்தன் ரூ.330-க்கும், ரஸ்தாளி ரூ.430-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

தேங்காய்

இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 7 ஆயிரத்து 600 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் தேங்காய் ஒன்று ரூ.7 முதல் ரூ.12.20-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.61 ஆயிரத்து 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story