பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை சரிவு


பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை சரிவு
x
தினத்தந்தி 24 Oct 2022 1:15 AM IST (Updated: 24 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் சந்தையில் வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் சந்தையில் வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழை சாகுபடி

பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏலம்

சிறுவிவசாயிகள் பரமத்திவேலூர் சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 -க்கும் ஏலம் போனது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. மற்ற நாட்களை விட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த ஏலத்தில் வாழைத்தார்களின் விலை சரிவடைந்துள்ளதால் வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story