வாழைத்தார் விலை உயர்வு


வாழைத்தார் விலை உயர்வு
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. 1 பூவன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்பனையானது.

தஞ்சாவூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. 1 பூவன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்பனையானது.

சில்லறை விற்பனை

கும்பகோணம்- தஞ்சை சாலையில் தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த மாதம் வரை காய்கறிகளின் விலை அதிகரித்து இருந்தது.

விலை உயர்வு

கும்பகோணம் மார்க்கெட்டிற்கு கரூர், மன்னார்குடி, தேனி, தூத்துக்குடி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் வாழைத்தார்கள் கடந்தவாரம் கும்பகோணத்தில் ரூ.300-க்கு விற்கப்பட்ட பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கு விற்பனையானது. ரூ.450-க்கும், ரூ.700-க்கு விற்பனையான செவ்வாழை ரூ.900-க்கு விற்பனையானது.

கற்பூரவல்லி, பச்சை வாழை ஆகிய தார்கள் வரத்து இல்லை. சில்லறை விலையில் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று ஒவ்வொரு வாழையும் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. கற்பூரவள்ளி வாழையில் விலைகளில் மாற்றம் இல்லை.

ரூ.150 வரை அதிகரிப்பு

இதுகுறித்து வாழைத்தார் வியாபாரிகள் கூறுகையில்,

தஞ்சைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வாழைத்தார்கள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழையின் காரணமாக விலை அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறி விலை மற்றும் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தை விட நேற்று விலை ஒவ்வொரு வாழைத்தாருக்கும் ரூ.100 முதல் ரூ.150 வரை அதிகரித்துள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி முதல் போட்டு வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வாங்கி வந்துள்ளோம். ஆனால் விலை உயர்வால் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் வாங்க விரும்பவில்லை. ஒரு சிலர் மட்டுமே விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர் என்றனர்.


Related Tags :
Next Story