தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணைகளில் குளிக்கத் தடை - கலெக்டர் உத்தரவு


தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணைகளில் குளிக்கத் தடை - கலெக்டர் உத்தரவு
x

பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி, மாயமான சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story