சிறுபாக்கம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
சிறுபாக்கம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
கடலூர்
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் ஊராட்சியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மேள, தாள இசையுடன் செவ்வாடை அணிந்த பக்தர்கள் அம்மன் வேடமிட்டும், அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story