பட்டத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
பட்டத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மேலவீதியில் பிரசித்தி பெற்ற பட்டத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பால்குடம், குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை பெரிய ஏரி கீழ் கரையில் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு பட்டத்து மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைப்பெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story