சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலில் பால்குட விழா


சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலில் பால்குட விழா
x

வழுத்தூர் சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜையும், பூச்சொரிதல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story