சிதம்பரத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
சிதம்பரத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் அம்பேத்கர் நகரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆதிபராசக்தி அம்மனுக்கு காப்பு கட்டி வழிபட்ட பெண்கள் நேற்று பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தில்லை காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வம், முக்கிய வீதிகள் வழியாக ஆதிபராசக்தி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று(சனிக்கிழமை) சந்தன காப்பு மின்விளக்கு அலங்காரமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அம்பேத்கர் நகர், அண்ணா குளம், வடகரை, கீழக்கரை, காமராஜ் தெரு பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.