பாலருவி நவீன வசதிகளுடன் சீரமைப்பு


பாலருவி நவீன வசதிகளுடன் சீரமைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே பாலருவி நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டத.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் ஆரியங்காவு பாலருவி உள்ளது. முன்பு கரடு முரடான பள்ளம் மற்றும் குண்டு குழியமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று குளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் வனத்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் பாலருவி நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உட்கார்ந்தும் குளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டு, ஆண்கள்- பெண்கள் இரு பிரிவாக பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு குளிப்பதற்கு நவீன வசதிகள் செய்யப்பட்டது. மேலும் பெண்களுக்கு உடை மாற்றும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக வனத்துறை சார்பில் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வனத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்தபின்னர் தான் வனத்துறை சார்பில் விடப்பட்ட வாகனத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்வதற்கு அனுமதிக்கின்றனர். இந்த வாகனத்தில் பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.70, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பாலருவியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட அறிந்த இருமாநில சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story