பால தண்டாயுதபாணி சாமி கோவில் பால்குட விழா


பால தண்டாயுதபாணி சாமி கோவில் பால்குட விழா
x

பால தண்டாயுதபாணி சாமி கோவில் பால்குட விழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்

குத்தாலம் பஞ்சுகார செட்டித்தெருவில் பால தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 58-வது ஆண்டு விசாக நட்சத்திர பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பக்தர்கள் காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், சாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மாலை சந்தனகாப்பும், சத்ருசம்ஹார திரிசிதி அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் குகனடியார்கள் செய்திருந்தனர்.






Next Story