பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x

வேலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வேலூர்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூரில் உள்ள முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து ஈக்தா மைதானம், மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு கூட்டு தொழுகை நடத்தினார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஈத்கா மைதானத்தில் கூட்டு தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் திரளான முஸ்லிம்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

அதேபோன்று வேலூர் சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், அல்லாபுரம், மக்கான், டிட்டர்லைன், சத்துவாச்சாரி, சேண்பாக்கம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகளை குலுக்கியும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

இதையொட்டி மசூதிகள், ஈத்கா மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story