பஸ் நிலையத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்


பஸ் நிலையத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்
x

பஸ் நிலையத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

அரியலூர்

ஓட்டல் கழிவுகள்

அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரியலூர் பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சிதிலமடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த பஸ் நிலையத்தில் ஆங்காங்கே ஓட்டல் கழிவுகள், டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடை, தின்பண்டங்கள் கடைகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் அந்த குப்பைகளை கால்நடைகள், நாய் போன்றவை உணவு தேடி கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

தூய்மையாக வைக்க...

இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், குப்பைகள் கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story