குமாரபாளையம் அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 9 மாத குழந்தை பலி


குமாரபாளையம் அருகே  தண்ணீர் வாளியில் மூழ்கி 9 மாத குழந்தை பலி
x

குமாரபாளையம் அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 9 மாத குழந்தை பலி

நாமக்கல்

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு நெசவு பூங்கா குடியிருப்பில் வசிப்பவர் விஜய். இவருடைய மனைவி கோமதி. இவர்களது சொந்த ஊர் வாணியம்பாடி ஆகும். இவர்களுக்கு 4 வயதில் மகளும், 3 வயதில் மகனும், 9 மாதத்தில் ஆண் குழந்தையும் இருந்தனர்.

3-வது குழந்தைக்கு சர்வின் என்று பெயர் வைத்தனர். இந்த குழந்தை தினசரி காலை 5 மணிக்கு எழுந்து கொள்ளுமாம். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் சர்வின் தனியாக விளையாடி கொண்டு இருக்குமாம்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சர்வினை, தந்தை விஜய் பார்த்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சர்வின் தண்ணீர் வாளியில் மூழ்கி கிடந்ததை கண்டு கதறினார். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், சர்வின் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் வாளியில் மூழ்கி 9 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story