ராமேசுவரத்தில் புனித நீராட குவிந்து வரும் அய்யப்ப பக்தர்கள்..!
ஞாயிற்று கிழமை என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்று கிழமை மற்றும் விடுமுறை நாளான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்களு கடற்கரையில் புனித நீராடி விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அதைபோல் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.