விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி


விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி
x

விருதுநகரில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் தனியார் திருமண அரங்கில் யோகாசன பயிற்சி நிறுவனங்கள் சார்பில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. நோபல் உலக சாதனை பதிவிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விருதுநகர், தஞ்சாவூர், திருச்சி, கோவில்பட்டி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியோர் வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த யோகாசன நிகழ்ச்சியில் 27 வகையான யோகாசனங்கள் செய்து காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்டோர் கண் தானத்தை வலியுறுத்தும் வகையில் கண்களில் கருப்பு துணி கட்டி யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை பதிவு நிறுவனத்தின் இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story