விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி


விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி
x

விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

விருதுநகர்


விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான யோகாசன போட்டி நடைபெற்றது. 50 பள்ளிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு யோகா ஆராய்ச்சி மைய தலைவர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதி வாழ்த்தி பேசினார். கல்லூரி செயலர் சர்ப்பராஜன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story