ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த விழிப்புணர்வு வாகனம்


ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த விழிப்புணர்வு வாகனம்
x

நாமக்கல் மாவட்டத்தில் நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

விழிப்புணர்வு வாரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாரம் வருகிற 4-ந் தேதி வரை அனுசரிக்கப்பட உள்ளது. மேலும் ஆண்களுக்கான நவீன வாசக்டமி பற்றிய விழிப்புணர்வு பணிகள் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.3,100 வழங்கப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

துண்டு பிரசுரம்

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) வளர்மதி, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் மோகன்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story