தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
x

தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள செல்வகம் சந்தானலட்சுமி நோபல் தனியார் பள்ளியில் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை உத்தரவின் பேரில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் விதமாக திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நிலைய அலுவலர் துரைராஜ் தலைமையில் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் தீயை அணைப்பது குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்ப்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயை எப்படி அனணக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். இதில் செல்வகம் சந்தானலட்சுமி நோபல் பள்ளி உரிமையாளர் எஸ்.நடராஜன், பள்ளி முதல்வர் ஷாலினி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story