விழிப்புணர்வு கருத்தரங்கு
கோபாலசமுத்திரத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராமஉதயம் சார்பில், கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் ஏழைப் பெண்கள் குடும்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் ஆறுமுகத்தாய் வரவேற்றார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, தனி அலுவலர் கணேசன், தலைவர்கள் சரஸ்வதி, ரஞ்சிதா, ஷர்மிளா, மனோன்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தனி அலுவலர் ரேவதி குமாரி நன்றி கூறினார். கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிராம உதயம் மையத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story