விழிப்புணர்வு கருத்தரங்கு
சாயர்புரம் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு குழு மாணவர்கள் படை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை சாந்தினி இஸ்ரேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை மாணவி மெர்சி ஜெயா, பிரதீபா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். முடிவில், பேராசிரியை ஜானகி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜோன்ஸ் ராஜன், இளவரசி, குட்டி, ஐஸ்கேர், ஜான்சன், ஆசீர், ஜெமிபிரியா, செண்பகபிரியா, பொன்சம், கிறிஸ்சைனி, ஜெயசுதா ஆகியோர் செய்து இருந்தனர்.