பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை,
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில், சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்" என்பது குறித்த மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story