விழிப்புணர்வு ரங்கோலி
சிவகாசி யூனியன் அலுவலக வளாகத்தில் ரங்கோலிகளை வரைந்து இருந்தனர்.
விருதுநகர்
சிவகாசி,
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிவகாசி யூனியன் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குவினர் பல்வேறு ரங்கோலிகளை வரைந்து இருந்தனர். இந்த ரங்கோலிகளை யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் யூனியன் அலுவலகத்தில் சதுரங்கபோட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ரங்கோலிகளை பார்வையிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story