பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகிரி அருகே பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகிரி:
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சமூக நலத்துறை இயக்குநர் அறிவுரையின் பேரில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிவகிரி அருகே தேவிபட்டணம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், தங்கராஜ் கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.