பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

திருப்பத்தூர்

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜே ஷ்கண்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிகொண்டா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ‌ அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் படிக்கும் பருவம் மிக முக்கியமான காலகட்டம். 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் நீங்கள் குழந்தைப் பருவத்தை தாண்டி அடுத்த நகர்விற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி சமூகத்தில் நல்ல சிந்தனைகளை விதைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் இந்த வாழ்க்கை சூழலில் செல்போன் இன்றியமையாததாக உள்ளது. அவற்றை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு பேருந்தில் வரும்போது சக மாணவிகளிடத்தில் கண்ணியத்துடன் நடந்து அவர்களை குடும்ப உறுப்பினர்களாக பாவித்து அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிகொண்டா காவல் உதவியாளர் ராஜகுமாரி, தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.



Next Story