விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 'எனது குப்பை எனது பொறுப்பு' மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சி வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். இதில் தனிநபர் கழிப்பிடம், பொது இடங்களில் எச்சில் துப்புவது, 2 குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்குதல், நீர் நிலைகளில் குப்பை கொட்டுதல் மற்றும் எரித்தல், கைகளை கழுவுதல் மற்றும் பொதுகழிப்பறைகளை பயன்படுத்துதல், புகார்களை கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், மகளிர் சுய உதவி குழு சமுதாய அமைப்பாளர், எஸ்.பி.எம். மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடத்தப்பட்டது.