தீத்தொண்டு வார நிறைவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
தீத்தொண்டு வார நிறைவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தீயணைப்புத்துறை சார்பில், ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தீத்தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டு வந்தது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில், பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நிறைவு நாளான நேற்று தீத்தொண்டு நாள் வார நிறைவு நாள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மியூசியத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பால்பண்ணை, பழனியப்பா கார்னர், கீழ ராஜவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story