சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு


சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழு ஆணையின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி குமரகுரு அறிவுறுத்தலின்பேரில், சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கே.எல்.பிரியங்கா வழிகாட்டுதலின்படி சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருவதன் நோக்கங்கள் குறித்தும் வக்கீல் எம்.துரைப்பாண்டி, சட்டம் சார்ந்த தன்னார்வலர் ராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story