குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரை அடுத்த மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியில் மாவட்ட போலீஸ் அலுவலகம் சார்பில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமை தாங்கி பேசும்போது பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைத்திட, இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கங்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறர் தவறான கண்ணோட்டத்தில் தொடாமல் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன், இன்ஸ்பெக்டர் நடராஜன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.