விழிப்புணர்வு ஊர்வலம்


விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

வேடசந்தூரில், 'குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்று அமைதி அறக்கட்டளையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, வி.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் சித்ராசெல்வி, மாவட்ட குழந்தைகள் நல குழு வக்கீல் ஜெயசுதா ஆகியோர் கலந்துெகாண்டனர்.


ஊர்வலத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்துக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர். ஊர்வலம் அம்பேத்கர் சிலை முன்பு தொடங்கி பஸ்நிலையம், குடகனாறு பாலம் வழியாக ஆத்துமேட்டில் முடிவடைந்தது. முடிவில் அமைதி அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, மணிமாறன், சுகன்யா, சசிகலா, நாகலட்சுமி, புவனேஸ்வரி, கோகிலா, ரேணுகாதேவி, ராஜேஸ்வரி, ஜெயப்பிரியா, மணிமேகலை, திவ்யா, முத்தமிழ்செல்வி, முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story