போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

தர்மபுரியில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம், போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஸ்ரீ விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சென்னை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் பைபாஸ் ரோடு வழியாக இலக்கியம்பட்டியை சென்றடைந்தது. ஊர்வலத்தின் போது மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி போதை பொருட்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் தணிகாச்சலம், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story