விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

கன்னியாகுமரி

குலசேகரம்,

பீனிக்ஸ் நற்பணி மன்றம் மற்றும் திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்கம் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. திற்பரப்பு சந்திப்பில் நடந்த விழிப்புணர்வு ஓட்டத்தை குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பீனிக்ஸ் நற்பணி மன்ற மாநில தலைவர் வேலாயுதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பெனடிக் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் ஜேசுராஜ், பென்சிகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விஜின் நன்றி கூறினார். இதில் திரளான மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது திற்பரப்பு சந்திப்பில் இருந்து மாஞ்சக்கோணம், பிணந்தோடு, கொல்லாறை, உண்ணியூர்கோணம், அரசமூடு வழியாக குலசேகரம் அண்ணா நகரில் நிறைவடைந்தது. தொடர்ந்து முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், அவர்களை தொடர்ந்து வந்த 25 நபர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story