காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காஞ்சீபுரம் மாவட்டம் சார்பில், பொதுமக்கள் மஞ்சள் பைகளை பயன்படுத்த செய்யும் வகையில், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.

கோடை விடுமுறை உள்ள நிலையிலும் இளைய சமுதாயமான பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காஞ்சீபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மஞ்சள் பை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வரை சென்றது.

மாரத்தான் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம். பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மஞ்சள் பைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் மாவட்ட விளையாட்டு அரங்கு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


Next Story