தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்


தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
x

தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நேற்று காலை நடந்தது. இதனை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அனுசியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் மற்றும் வாக்கத்தான் தலைமை தபால் நிலையம், மத்திய பஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாரத்தான் ஓட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் சக்திவேல், கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தனர். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சங்கர் (வணிகம்), ரங்கராஜன் (பணியாளர் மற்றும் சட்டம்), கார்த்திகேயன் (தொழில்நுட்பம்), புகழேந்தி (நகரம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story