அமைதியை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான்


அமைதியை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான்
x

அமைதியை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடந்தது.

சென்னை

சென்னை பெசன்ட் நகரில் அமைதியை வலியுறுத்தி ஐ.ஐ.எப்.எல். ஜீதோ என்ற அமைப்பின் பெண்கள் பிரிவு சார்பில் 'விழிப்புணர்வு அகிம்சா மாரத்தான்' நேற்று நடந்தது. 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ. என்ற 3 பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது.

இதில் 10 கி.மீ. மாரத்தானை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தன்னுடைய மகள் சிஞ்சுவுடன் பங்கேற்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். 5 கி.மீ. மாரத்தானை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் மற்றும் பளுதூக்கும் வீராங்கனை ஆர்த்தி அருண் ஆகியோரும், 3 கி.மீ. மாரத்தானை ராஜஸ்தான் மாநில சுரங்கம் மற்றும் பெட்ரோலியத்துறை மந்திரி பிரமோத் பயா ஜெயினும் தொடங்கிவைத்தனர். இந்த விழிப்புணர்வு மாரத்தான் சென்னை மட்டுமல்லாது, நாடு முழுவதும் 65 இடங்களில் நேற்று நடந்தது.

சென்னையில் நடந்த மாரத்தானில் 10 கி.மீ. பிரிவில் ராகேஷ் குமாரசாமி, ஆஷா தீபியும், 5 கி.மீ. பிரிவில் சுபாஷ், கனிஷ்காவும், 3 கி.மீ. பிரிவில் தீபேஷ், விக்னேஷ்வரியும் வெற்றி பெற்றனர். மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார். மேலும் இதில் பங்கேற்ற கென்யாவை சேர்ந்த ஐசக் கேமொய்க்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.


Next Story