மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பத்தூரில் உள்ள பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெய் நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெய் நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி நூலகர் கமல்விழி நூலகம் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா மற்றும் நூல்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசு பொருட்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதில், பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story