தற்கொலைகளை தடுக்க தமிழக அரசுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல்
ஐ.ஐ.டி.யில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள் வருத்தமளிப்பதாக ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் ஹார்ட்வேர் டிசைன் செண்டர், மொபைல் போன் உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான மையம் என்பன உள்ளிட்ட 3 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, 3 புதிய மையங்கள் திறப்பு காரணமாக துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐ.ஐ.டி.யில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். தற்கொலைகளை தடுப்பதற்கு behappy.iitm.ac.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story