உலக ஓசோன் தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம்


உலக ஓசோன் தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம்
x

உலக ஓசோன் தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

அரியலூர்

உலக ஓசோன் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் காற்று மாசுபடுதலை தவிர்ப்பது குறித்தும், விநாயகர் சதுர்த்தி விழாவில் நீர்மாசுபடாமல் கொண்டாடுவது குறித்தும் தேசிய பசுமை படை மாணவர்கள், ஆசிரியர்கள் ஒலிப்பெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது இயற்கை சார்ந்த, சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண், அரிசி மாவு, மஞ்சள் போன்ற பொருட்களாலான விநாயகர் சிலைகளை பயன்படுத்துவோம். ரசாயனம், ஈயம், பாதரசம், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் விநாயகர் சிலைகளுக்கு, இயற்கையான மலர்கள், இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாயங்களை கொண்டு வண்ணம் தீட்டி பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளை முழுமையாக தவிர்த்து, பூஜை பொருட்கள் வாங்குவதற்கு துணி பைகளை பயன்படுத்தலாம். பூஜைக்கு பிறகு அலங்கார பொருட்களை வீட்டிலேயே அகற்றி நீர் நிலைகளில் சேராமல் விழா கொண்டாடலாம். மாசில்லாமல் விநாயகர் சிலையை நீர் நிலைகளிலும் கரைக்கலாம். மாசில்லாமல் பசுமை வழியில் விநாயகரை வழிபடுவோம் சுற்றுச்சூழலை காப்போம் என்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை சுற்றுசூழல் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.


Next Story